×

கோ பர்ஸ்ட் சேவை ரத்தால் விமான டிக்கெட் விலை உயரும்: டிராவல் ஏஜென்டுகள் சங்கம் தகவல்

மும்பை: கோ பர்ஸ்ட் நிறுவனம் தனது விமான சேவையை 3 நாட்களுக்கு ரத்து செய்துள்ளதால் விமான டிக்கெட்டின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கோ பர்ஸ்ட் விமான நிறுவனத்தை வாடியா வர்த்தக குழுமம் நடத்தி வருகிறது. கடும் நிதி நெருக்கடி காரணமாக விமான எரிபொருள் நிறுவனங்களுக்கு பணம் நிலுவையில் வைத்துள்ளது. இதனால் கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் 28 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் 3 நாட்கள் தனது சேவையை நிறுத்தி உள்ளது. மேலும் டெல்லியிலுள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், இந்திய டிராவல் ஏஜென்ட்ஸ் அமைப்பின் தலைவர் ஜோதி மாயா கூறுகையில், “கிங்பிஷர், ஜெட் ஏர்வேய்ஸ் விமான நிறுவனங்களினால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

தற்போது மற்றொரு விமான நிறுவனம் திவால் நடவடிக்கையில் உள்ளது. இது மிகவும் பலவீனமான தொழில் ஆகும். 17 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கோ பர்ஸ்ட் நிறுவனம் மார்ச் 26 முதல் அக்டோபர் 28 வரை வாரத்துக்கு 1,538 சேவைகளை நிறுத்தி இருப்பதால், விமான டிக்கெட்டின் விலை உயரும் அபாயம் உள்ளது,” என்றார.

The post கோ பர்ஸ்ட் சேவை ரத்தால் விமான டிக்கெட் விலை உயரும்: டிராவல் ஏஜென்டுகள் சங்கம் தகவல் appeared first on Dinakaran.

Tags : GoBurst Service Ratal ,Travel Agents Association ,Mumbai ,GoBurst Company ,Go Burst Service ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்